விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-08 20:17 GMT
ஜெயங்கொண்டம்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் விஜயன்(வயது 40). இவரும், இவரது குடும்பத்தினரும் ஒரு காரில் சென்னையில் இருந்து குடவாசல் நோக்கி சென்றனர். காரை சரவணன் என்பவர் ஓட்டினார். நேற்று முன்தினம் அதிகாலை ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள கல்லாத்தூர் கிராமத்திற்கு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல்கள் மீது மோதியது. இதில் டிைரவருக்கு இடதுபுறம் இருக்கையில் அமர்ந்து வந்த விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், விஜயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த காரில் பயணம் செய்த 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்