புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Update: 2021-07-08 20:08 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
50 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. 
இந்தநிலையில் ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது.
ஒருவர் பலி
ஆனால், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். 
இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்