வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது
நாங்குநேரி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள பாணாங்குளத்தில் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நெல்லை வண்ணார் பேட்டையைச் சேர்ந்த அய்யாசாமி (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் வந்திருந்தார். இந்த நிலையில் அவர் இரவு 7 மணியளவில் அதே ஊரில் உள்ள முருகன் மனைவி பேச்சியம்மாள் (70) என்பவரின் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த நகை மற்றும் ரூ.22 ஆயிரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யாசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.