லாரிகளில் குண்டுக்கல் கடத்திய 3 பேர் கைது
லாரிகளில் குண்டுக்கல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகபெருமாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனைஞ்சிப்பட்டி-மூலைக்கரைப்பட்டி ரோட்டில் வந்த 3 லாரிகளை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். இதில் அந்த லாரிகளில் அனுமதியின்றி குண்டுக்கல் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர்களான ஏசுராஜா (வயது 51), பினோஸ் (34), அனீஸ் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.