பலத்த காற்றுடன் மழை

தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது.

Update: 2021-07-08 17:56 GMT
தேனி: 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழையும், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 

அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. தேனியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 


மாலை 6 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை நீடித்தது. அதுபோல் உத்தமபாளையம், போடி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் பகுதிகளிலும் நேற்று மாலை சாரல் மழை பெய்தது.

மேலும் செய்திகள்