தொண்டி-சென்னை இடையே அதிவிரைவு அரசு சொகுசு பஸ்

தொண்டி-சென்னை இடையே அதிவிரைவு அரசு சொகுசு பஸ்-கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Update: 2021-07-08 17:49 GMT
தொண்டி
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக எடுத்த நடவடிக்கையின் பேரில் தொண்டியிலிருந்து திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு அதி விரைவு நவீன சொகுசு பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழா தொண்டி பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தலைமை தாங்கி தொண்டி-சென்னை இடையே புதிய வழித்தடத்தில் அதி விரைவு நவீன சொகுசு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருவாடானை தொகுதியில் பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர், போக்குவரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்