மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி

எஸ்.புதூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலியானார்.

Update: 2021-07-08 17:49 GMT
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கிழவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). இவர் மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு சென்ற போது, எஸ்.புதூர் மின்வாரிய அலுவலகம் அருகே எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் (39) மோதினார். இதில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த ராஜாங்கம் ஆம்புலன்ஸ் மூலமாக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்