விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-08 17:47 GMT
முத்தூர்
 முத்தூர் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு பவித்ரா (33) என்ற மனைவியும், கலைசிவானி(9) என்ற மகளும் உள்ளனர். இந்த தம்பதிக்கு புது வீடு கட்டியதில் கடன்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்தியராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். 
இந்த நிலையில் சத்தியராஜ் நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு தனது வீட்டில் இருந்த தாயார் செல்வியிடம்  விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக சத்தியராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சத்தியராஜ் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சத்தியராஜ் மாலை 5.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுபற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்