ஜார்கண்ட் மாநிலத்தில் பாதிரியராக வேலை பார்த்த ஸ்டேன் சுவாமி சிறையில் இருந்த போது மரணம் அடைந்தார். அவருக்கு சரிவர குடிநீர் கொடுக்காததால் இறந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இளையான்குடி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இதை தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 10 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.