மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி சாவு

மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி சாவு

Update: 2021-07-08 17:29 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே கீழ்மின்னல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கட்டிட மேஸ்திரி. இவரது தாய் சாரதாம்பாள் (வயது 68). இவர்   நேற்று காலை பேரப்பிள்ளைகளுடன் வீட்டின் வெளியே இருநதார். 

அப்போது திடீரென வீட்டிற்கு மேலே செல்லும் மின்சார வயர் தீப்பற்றி எரிந்தது. சாரதாம்பாள் தனது பேரப்பிள்ளைகளை வீட்டிற்குள் போகும்படி கூறினார். அதற்குள் மின்சார கம்பி அறுந்து சாரதாம்பாள் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தீப்பற்றி எரிந்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரத்தனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்