கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை
எஸ்.அய்யம்பாளையத்தில் கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
மேலும் நடமாடும் வாகனங்கள் மூலம் தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி எஸ்.அய்யம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைபார்க்கும் 60 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசு டாக்டர் பவித்ரா தலைமையிலான மருத்துவ குழுவினர் சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.