வெளியூர் சென்று உல்லாசமாக இருக்க கொள்ளை நாடகம் நடத்தினோம் கள்ளக்காதலன் வாக்குமூலம்
வெளியூர் சென்று உல்லாசமாக இருக்க கொள்ளை நாடகம் நடத்தினோம் என்று கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெளியூர் சென்று உல்லாசமாக இருக்க கொள்ளை நாடகம் நடத்தினோம் என்று கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதலன் வாக்குமூலம்
கோவை மாவட்டம் சோமனூரில் அழகுநிலைய பெண் கங்காதேவி தற்கொலை வழக்கில் கைதான கள்ளக்காதலன் முத்துபாண்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த நான், மனைவி மற்றும் குழந்தை களைவிட்டு பிரிந்து இருந்தேன், கடந்த 2020-ம் ஆண்டு முதல் கங்காதேவியுடன் முகநூல் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
அப்போது எனக்கு வேலை இல்லை என்றும், வேலை வாங்கி தரும்படியும் கங்காதேவியிடம் கூறினேன்.
உடனே என்னை அவர் கோவை மாவட்டம் சோமனூர் வரச்சொன்னார். உடனே நானும் சோமனூர் வந்தேன். பின்னர் அவர் எனக்கு அவினாசியில் உள்ள ஒரு மில்லில் வேலை வாங்கி தந்தார்.
அங்கு தங்கி இருந்த நான், எனக்கு வாரவிடுமுறை அன்று சோமனூர் செல்வேன்.
சேர்ந்து வாழ முடிவெடுத்தோம்
நான் அங்கு செல்லும் நாளில் எனக்கு 3 வேளையும் உணவை கங்காதேவி கொண்டு வருவார். அழகுநிலையத்தில் இருந்து அந்த உணவை சாப்பிட்டு நாங்கள் உல்லாசமாக இருந்தோம். நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வதற்காக எனக்கு அவர் புதிய செல்போனும் வாங்கி கொடுத்தார்.
அதில் அவ்வப்போது வீடியோ காலிலும் பேசிக்கொள்வோம். நாங்கள் அழகுநிலையத்தில் ஒன்றாக இருக்கும்போது ஒருவித பயம் கங்காதேவி யிடம் இருந்தது.
மேலும் தனது கணவர் ஓட்டல் தொழிலில் பிசியாக இருப்பதால் தன்னை சரியாக கவனிப்பது இல்லை என்றும், இப்படி தினமும் பயந்து வாழ்வதற்கு பதிலாக இருவரும் வேறு எங்காவது சென்று சேர்ந்து வாழலாம் என்று என்னிடம் கூறினார். எனவே 2 பேரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்தோம்.
கணவரை ஏமாற்ற திட்டம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போனில் தொடர்பு கொண்ட கங்காதேவி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், அதன்படி செய்தால் இருவரும் எங்கேயாவது போய் சந்தோஷமாக வாழலாம் என்றும் கூறினார். நானும் அந்த திட்டத்தை ஆர்வமாக கேட்டேன்.
அழகுநிலையத்தில் நகையை வைத்து இருந்ததாகவும், வடமாநில வாலிபர்கள் கட்டிப்போட்டு கொள்ளையடித்துவிட்டு போய்விட்டனர். என்னையும் பலாத்காரம் செய்துவிட்டு சென்றுவிட்டதாக எனது கணவரிடம் கூறி விடுகிறேன்.
இதனால் அவமானம் தாங்காமல் வெளியில் சொல்ல மாட்டார். என்கூடவும் வாழ மாட்டார். அதன் பின்னர் 2 பேரும் ஏதாவது ஒரு ஊருக்கு சென்று ஜாலியாக வாழலாம் என்றார். இந்த யோசனை எனக்கு பிடித்தது.
நாடகத்தை அரங்கேற்றினோம்
அதன்படி கடந்த 6-ந் தேதி நான் கங்காதேவியின் அழகுநிலையத்துக்கு வந்தேன். அங்கு 2 பேரும் சேர்ந்து உல்லாசமாக இருந்தோம். பின்னர் நாங்கள்சொல்லி வைத்தபடி எங்களது நாடகத்தை அரங்கேற்றினோம்.
ஆனால் கங்காதேவி கூறியபடி, அவருடைய கணவர் கேட்கவில்லை.
போலீசில் புகார் செய்துவிட்டார்.
நாங்கள் திட்டமிட்டது ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று என்பதால் கங்காதேவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் எனக்கு தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். நான் தற்கொலை செய்ய வேண்டாம் என்று கூறினேன்.
குறுஞ்செய்தி அனுப்பினார்
மேலும் போலீஸ் விசாரணையின்போது நடந்த சம்பவங்களை எனக்கு செல்போனில் மெசேஜ் (குறுஞ்செய்தி) அனுப்பியபடி இருந்தார். நான் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து ஊட்டிக்கு சென்றுவிட்டேன்.
கங்காதேவி நடத்தி வந்த அழகுநிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை.
ஆனால் எதிரே உள்ள ஒரு கடையில் கண்காணிப்பு கேமரா இருந்தது.
அதில் நான் அங்கு சென்ற காட்சி பதிவாகி இருக்கும் என்பதால், எங்கள் கள்ளக்காதல் விஷயம் தெரிந்துவிடும் என்று கருதி பயந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
என்னிடம் அவர் பேசி வந்த போன் மூலம் நானும் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு கள்ளக்காதலன் முத்துபாண்டி போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.