கீழக்கரை
கீழக்கரையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் பேசும்போது, அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் கடையில் பணிபுரியும் 18 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொரோனா இல்லாத தமிழகமாக உருவாக்க வேண்டும். கடை உரிமம் பெறாதவர்கள் காலதாமதமின்றி பெற்றுக்கொள்ள வேண்டும். டீ கடைகளில் தயாரிக்கப்படும் வடை, பஜ்ஜி போன்றவற்றைக்கு உபயோகிக்கப்படும் பழைய எண்ணெயை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் உபயோகித்தால் இதய கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும். அதனை மண்ணில் செலுத்தும்போது அந்த மண் பகுதி மலட்டுத்தன்மையாக மாறிவிடும் என்றார்.