கோழிப்பண்ணைக்குள் புகுந்த நாகப்பாம்பு

பழனி அருகே கோழிப்பண்ணைக்குள் நாகப்பாம்பு புகுந்தது.

Update: 2021-07-08 16:18 GMT
பழனி:

பழனி அருகே உள்ள வயலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அரவிந்த். இவர், அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த பண்ணைக்குள் நேற்று நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

 இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதியில், பதுங்கி இருந்த 4 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்