ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவு

ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவு

Update: 2021-07-08 16:14 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் 102 ரெட்டியூர் ஊராட்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.  ராணிப்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் கடந்த ஆண்டு 100 நாள் வேலை வழங்கப்பட்டதா என்று கேட்டு அறிந்தார். வேலை அட்டையில் ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் வேலை வழங்கிய விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படாததை கண்டறிந்தார். மேலும் பணியாளர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளான கிருமி நாசினி, வெப்ப நிலை பரிசோதனை மற்றும் முககவசம் அணியாததை பார்த்து, விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டார்.

மல்லிகுட்டை கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தை பார்வையிட்டார். அப்போது பட்டா பயனாளியின் தந்தை பெயரில் உள்ளது ஆனால் மகன் பெயரில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அரசின் விதியை மீறி ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து ஊராட்சி செயலாளர் ஆனந்தன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்திரவிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாகயம், மணவாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்