கோவில்பட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடு்ப்பூசி முகாம்

கோவில்பட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

Update: 2021-07-08 11:59 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரில் நேற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி முகாம் ஸ்ரீராம்நகர் நகர் நல மையம், மற்றும் தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.
தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர்கள் ராமமூர்த்தி, தமிழ்ச் செல்வி தலைமையில் செவிலியர் லலிதா குழுவினர் 20 கர்ப்பிணி பெண்களுக்கும், ஸ்ரீராம்நகர் நகர் நல மையத்தில் டாக்டர் மகேந்திரன் தலைமையில் 22 கர்ப்பிணிப் பெண்களுக்கும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்