உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலியானார்.

Update: 2021-07-08 11:51 GMT
குலசேகரன்பட்டினம்:
 உடன்குடி மெய்யூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அழகுவேல் மகன் பழனி ராஜா (வயது 48). விவசாயி. இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி பிரிந்து சென்று விட்டார். தற்போது, தனது தாயாருடன் வசித்து வந்தார். இவர், சம்பவத்தன்று காலை 11 மணிக்கு தனக்கு சொந்தமான மோட்டார் ைசக்கிளில் மெய்யூரில் இருந்து உடன்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். தாங்கை பண்டாரபுரம் விலக்கு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடியுள்ளது. அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் ரோடு ஓரம் இருந்தவேலி கம்பத்தில் மீது விழுந்ததில், தலையில் பின்பக்கம் அடிபட்டு மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்