சாராய வியாபாரி, மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி,மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.;
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த மரத்துறை கிராமம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் கலிங்கராஜன் (வயது22). சாராய வியாபாரி. கும்பகோணத்தை அடுத்த வலையப்பேட்டை வாட்டர் டேங் தெருவை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் வாஞ்சிநாதன் (24). மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இவர்மீது வழக்கு உள்ளது.
இதையடுத்து கலிங்கராஜன் மற்றும் வாஞ்சிநாதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் கலிங்கராஜனை, பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரியும், மணல் கடத்தல் தொடர்பாக வாஞ்சிநாதனை, கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.