வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம்

வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம் எர்ணாவூர் நாராயணன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-08 04:15 GMT
சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 25-வது ஆண்டு ரத்த தான முகாம், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த தான வங்கி வளாகத்தில் நேற்று நடந்தது. ரத்த தான முகாமை சங்கத்தின் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தொடங்கி வைத்தார். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி தலைவர் ராஜ்குமார், சங்க நிர்வாகிகள் எம்.கண்ணன், எஸ்.தங்கமுத்து, என்.ஏ.தங்கதுரை, பாஸ்கர், கே.எஸ்.மூர்த்தி, ராஜேந்திரன், ராஜேஷ், மாரியப்பன், எமர்சன், இளையராஜா, சங்கரபாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முகாமில் ஏராளமான கொடையாளிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

மேலும் செய்திகள்