அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அரியலூர்
மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று 49 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 42 பேர் கொரோனாவில் இருந்து குணமானதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 450 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.