உசிலம்பட்டி வாலிபர் உள்பட 2 பேர் பலி
நரிக்குடி அருகே ஏற்பட்ட விபத்தில் உசிலம்பட்டி வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தன
காரியாபட்டி,
நரிக்குடி அருகே ஏற்பட்ட விபத்தில் உசிலம்பட்டி வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பிறந்த நாள் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் அபிஷேக் (வயது 21), நவீன் (22). இவர்கள் இருவரும் நரிக்குடி அருகே உள்ள உலக்குடியில் தனது நண்பரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் உசிலம்பட்டிக்கு புறப்பட்டனர். அவர்கள் நரிக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது நரிக்குடி அருகே பனைக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பசாமி (49) சாலையை கடக்க முயன்றார். அப்போது நவீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கருப்பசாமி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
2 பேர் பலி
இந்த விபத்தில் நவீன், கருப்பசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அபிஷேக் பலத்த காயமடைந்தார். அவர் மதுைர அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.