250 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

பாளையங்கோட்டையில் 250 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-07 19:47 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை டி.வி.எஸ்.நகர் ரெயில்வே பாலம் அருகே நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு ஒரு லாரி விபத்தில் சிக்கி நின்று கொண்டு இருந்தது. அந்த லாரியில் அரிசி மூட்டைகள் அதிகளவில் இருந்தது. இதைப்பார்த்த போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினார்கள். 

அப்போது அந்த லாரியில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த லாரியில் இருந்த 250 மூட்டை ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் மார்த்தாண்டத்தை சேர்ந்த சாஜூ என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்