வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு
சேரன்மாதேவி வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளிடம் கலந்துரையாடல்
சேரன்மாதேவி வட்டாரத்தில் நடைபெற்று வரும் வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். வடக்கு கல்லிடைக்குறிச்சியில் உள்ள எந்திர நடவு தொகுப்பு திடல்களை பார்வையிட்ட அவர் அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கரம்பையில் அட்மா திட்டத்தின் சார்பில் இயற்கை பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சியில் கலெக்டர் விஷ்ணு பங்கேற்று பேசினார். அப்போது இயற்கை விவசாயம் மூலம் தரமான விளைபொருட்களை விளைவிக்குமாறு விவசாயிகளைக் கேட்டு கொண்டார்.
அதிகாரிகள்
இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திரபாண்டியன், அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆறுமுகசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுபா வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அம்பை வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். மேல அம்பாசமுத்திரத்தில் விவசாயி பெருமாளின் வயலில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.