சக்கர நாற்காலிகள் வழங்கிய ஓய்வூதியர் சங்கத்தினர்

சக்கர நாற்காலிகள் வழங்கிய ஓய்வூதியர் சங்கத்தினர்

Update: 2021-07-07 18:24 GMT
மதுரை
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தினர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைக்கு உதவும் நோக்கில், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டி, அந்த நிதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பயன்படும் வகையில் 10 சக்கர நாற்காலிகளை நேற்று மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்க நிர்வாகிகள், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்