மதுவில் விஷம் கலந்து குடித்து கொத்தனார் தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து கொத்தனார் தற்கொலை

Update: 2021-07-07 18:09 GMT
கீரனூர், ஜூலை.8-
கீரனூரை அடுத்த மேல புதுவயல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). கொத்தனாரான இவர் நாகப்பட்டினத்துக்கு வேலைக்கு சென்றபோது அங்கு மதுமிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் வீட்டில் போதிய வசதி இல்லை என்று கூறி மதுமிதா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வந்ததை தாயார் மாரிக்கண்ணு கண்டித்தார். இதனால் விரக்தி அடைந்த அவர்  வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீரனூர்அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்