மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-07-07 17:31 GMT
சிவகங்கை, 
டீசல் மற்றும் பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ம.ம.க. தலைவர் துல்கருணை சேட் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கமருல் ஜமான் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர் செயலாளர் ஹைதர்மீரான் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்