கிருஷ்ணகிரியில் கடை வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி, உதை

கிருஷ்ணகிரியில் கடை வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி, உதை விழுந்தது.

Update: 2021-07-07 16:53 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 29). இவர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் கிருஷ்ணகிரி, லட்சுமணராவ் தெருவை சேர்ந்த மஞ்சுநாதன் (35) என்பவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மஞ்சுநாதன் கடந்த ஓராண்டாக கடைக்கு வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகராஜ், தனது உறவினருடன் சென்று வாடகை கேட்டுள்ளார். அப்போது மஞ்சுநாத் மற்றும் இவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து அவர்களை அடித்து, உதைத்தனர். மேலும் உருட்டுக்கட்டையால் அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில் நாகராஜும், இவரது உறவினரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்