ஓசூரில் பட்டப்பகலில் துணிகரம்: மொபட்டில் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் திருட்டு

ஓசூரில் பட்டப்பகலில் மொபட்டில் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் திருடப்பட்டது.

Update: 2021-07-07 16:53 GMT
ஓசூர்:
ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 56). ஜோசியர். இவருடைய மனைவி வள்ளிக்கண்ணு. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ரவி நேற்று ஓசூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ,28 ஆயிரத்தை எடுத்து, அதனை தனது மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் ரிங் ரோடு அருகே அவரது மொபட்டின் டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து அதை மெக்கானிக் கடையில் நிறுத்தி விட்டு, டியூப் வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மொபட்டின் சீட் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.28 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ரவி ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ரூ.28 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்