மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-07 16:43 GMT
தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் மணவாளன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். 

ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவி சாருலதாவை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். 

மேலும் செய்திகள்