சத்துணவு அமைப்பாளரிடம் சங்கிலி பறிப்பு

சத்துணவு அமைப்பாளரிடம் சங்கிலி பறிப்பு

Update: 2021-07-07 16:34 GMT
அரக்கோணம்

அரக்கோணம் நாகாலம்மன் நகரை ேசர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 58). இவர் திருத்தணியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு அரக்கோணம் திரும்பிய அவர், நாகாலம்மன் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் தமிழ்ச்செல்வியை பின் தொடர்ந்து வந்து, அவர் அணிந்திருந்த 1¼ பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார்.
 
இது குறித்து தமிழ்ச்செல்வி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்