வெளி மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உணவுப்பொருட்கள்

வெளி மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உணவுப்பொருட்கள்

Update: 2021-07-07 16:01 GMT
உடுமலை
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள பலமில்களில் புலம்பெயர்ந்த வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 312 குடும்பத்தினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு உத்தரவுப்படி தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, 1 கிலோ பாமாயில் ஆகியவை கொண்ட கொரோனா நிவாரண உணவுப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு மூட்டைகளில் வந்த அரிசி மற்றும் துவரம் பருப்பு ஆகியவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்குவதற்காக நேற்று எடையிடப்பட்டு தனித்தனி பைகளில் வைக்கப்பட்டன. அவற்றுடன் கவர்களில் வந்த பாமாயில் பாக்கெட்டும் அந்த பைகளில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை உடுமலை தாசில்தார் வி.ராமலிங்கம் முன்னிலையில் ரேஷன் கடை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்