குமரலிங்கத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
kumaralingam 7 per arest
போடிப்பட்டி
குமரலிங்கம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது குமரலிங்கத்தை அடுத்த பெருமாள்புதூர் பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ரூ.1,540 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.