ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-07 15:26 GMT
திருப்பூர்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுகாலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள பா.ஜ.க.வை கண்டித்தும், ஐ.ஐ.டி.யில் சாதி ஆதிக்கத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் விடுதலை செல்வன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை மாநிலத் துணைச்செயலாளர் சோழன் மற்றும் செந்தில்குமார், வக்கீல் கனகசபை, மாநில மகளிர் அணி செயலாளர் சாவித்திரி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்