திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்

திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்

Update: 2021-07-07 15:21 GMT
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள். தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால் உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததால் மீண்டும் பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களுக்கு இருந்து நாளுக்கு நாள் வருகிற தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
திருப்பூரில் பல நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாகன வசதி உள்ள நிறுவனங்கள் தற்போது வடமாநிலங்களில் இருந்து ரெயில்களில் திருப்பூருக்கு வந்து இறங்கும், தங்களது நிறுவன தொழிலாளர்களை அழைத்து செல்ல வாகனங்களை அனுப்புகிறார்கள். ரெயில் வரும் நேரத்தில் வாகனங்கள் ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்படுகின்றன.தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது நிறுவனங்களில் வாகனங்களில் அமர்ந்து, நிறுவனங்களுக்கே வந்து விடுகிறார்கள். இதனால் தற்போது ரெயில் நிலையத்தில் பனியன் நிறுவனங்களின் வாகனங்கள் ஏராளமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்