நாகை, வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது
நாகப்பட்டினம்:-
நாகை காயாரோகணசாமி கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல் அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம்அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கொராேனா ஊரடங்கு தளர்வுகளின்படி பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.