சோளிங்கர் அருகே போதையில் பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி சாவு
போதையில் பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி சாவு
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் சத்தியமூர்த்தி (வயது 36), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி உமா மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். சத்தியமூர்த்திக்கு குடி பழக்கம் உண்டு. அவர், கடந்த 3-ந்தேதி காலை மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. போதையில் இருந்த அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார்.
வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சத்தியமூர்த்தி உயிரிழந்தார். கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.