தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் ரோந்துப்பணி தொடக்கம்

தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் ரோந்து பணி தொடங்கி உள்ளது.

Update: 2021-07-07 12:38 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசாரின் மோட்டார் சைக்கிள் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
ரோந்து பணி
தூத்துக்குடி நகர போக்குவரத்து போலீஸ் மார்ஷல் என்று அழைக்கப்படும் மோட்டார் சைக்கிள் ரோந்து பணி தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி ரோந்து பணியை தொடங்கி வைத்தார். இந்த ரோந்து மோட்டார் சைக்கிளில் அவசர ஒலிப்பான், ஒளிரும் விளக்குகள், சிறிய ஒலி பெருக்கி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 
இந்த மோட்டார் சைக்கிள் தூத்துக்குடி நகரம் முழுவதும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி பீச் ரோட்டிலில் இருந்து வ.உ.சி காய்கனி மார்க்கெட் வரை ஒரு ரோந்தும், காய்கனி மார்க்கெட்டில் இருந்து, இந்திய உணவுக்கழக குடோன் வரை மற்றொரு ரோந்து வாகனமும் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த பணி தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சுழற்சி முறையில் தினமும் 4 போக்குவரத்து போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.
சாலை விதிகளை மீறுபவர்கள் மீது...
இவர்கள் தூத்துக்குடி நகர்புறத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியிலும், சாலை விபத்துக்களை தவிர்ப்பதும், சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு     ஏற்பாடு     செய்வார்கள். தேவையில்லாமல் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் உட்பட அனைத்து சாலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரணடு கணேஷ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்