புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 1,753 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 129 பேர், காரைக்காலில் 33 பேர், மாஹேவில் 23 பேர், ஏனாமில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,18,416 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 225 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,898 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,753 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.