அத்திமரப்பட்டியில் விவசாயிகள் சங்க கூட்டம்
அத்திமரப்பட்டியில் விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
ஸ்பிக்நகர்:
முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க கூட்டம், அத்திமரப்பட்டியில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் அழகுராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சேகர், பொருளாளர் கந்தசாமி, உறுப்பினர்கள் முருகேசன், திருமால், கிருபானந்ன், அழகேசன், ரகுபதி, வனமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.20 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த அதிகாரியை விடுவித்து, ஸ்ரீவைகுண்டம் புதிய உதவி பொறியாளரை பணியமர்த்திய மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன், இந்த வருடம் மழை காலத்திற்கு முன் உப்பாறு ஓடை வேலையை முடிக்க வேண்டியும், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் மூலம், குழு அமைத்து கோரம்பள்ளம் குளம், உப்பாறு ஓடை ஆகியவற்றில் மண் எடுக்க மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோரம்பள்ளம் குளம் பாசன பகுதிக்கு ஒதுக்கப் பட்ட தண்ணீர் முழு வீச்சில் கடைசி பகுதி வரை வந்தடைய வேண்டி அதிகாரிகளை நேரில் சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் உப்பாற்று ஓடை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.