நாகையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் குமாரசாமி, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் மூலம் ரூ 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். சுங்கசாவடிகளில் வாகனங்களுக்கான வரிவிதிப்பை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.