பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி.;

Update: 2021-07-07 03:03 GMT
தாம்பரம்,

சென்னை மாதவரம் பொன்னியம்மேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். ஆட்டோ டிரைவரான இவருடைய மகன் நவீன்குமார் (வயது 21). அப்பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மதியம் கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் பல்லாவரம் அருகே சங்கர் நகர் போலீஸ் நிலையம் பின்புறம் மலை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு சென்று குளித்துள்ளார்.அப்போது அவர், நீரின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட சக நண்பர்கள் அவரை காப்பாற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்