மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கோபுரத்தில் யாழி உடைந்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கோபுரத்தில் யாழி உடைந்தது. இந்த யாழியை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கோபுரத்தில் யாழி உடைந்தது. இந்த யாழியை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலையில் செந்தலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் குடமுழுக்கு விழாவுக்கான முன் ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முன்புற கோபுரத்தின் உச்சியில் தெற்கு பகுதியில் இருந்த யாழி சிலை உடைந்து அருகிலுள்ள கலசத்தின் மேல் சாய்ந்து உள்ளது. மேலும் கோவில் கோபுரத்தில் செடிகள் அதிக அளவு முளைத்து உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர் கோபுரத்தின் கீழ் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக வருவதற்காக கம்பி கட்டி தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். எனவே உடைந்த யாழியை சீரமைத்து பொருத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.