டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-07-06 19:59 GMT
சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் மாங்குடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். 

டிராக்டரை ஓட்டி வந்தவர் மாங்குடி கிராமத்தை சேர்ந்த லூர்து சேவியர் மகன் ஆனந்த் (வயது 25) என்பதும், அவர் அரசு அனுமதியின்றி அங்குள்ள கண்மாயில் இருந்து மண் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்தை கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்