காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் திறப்பு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் நேற்று முதல் திறக்கப்பட்டது.

Update: 2021-07-06 19:38 GMT
விக்கிரமசிங்கபுரம், 
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் நேற்று முதல் திறக்கப்பட்டது. 

ஆற்றில் புனித நீராடினர்

கொரோனா ஊரடங்கையொட்டி பாபநாசம் கோவில் அடைக்கப்பட்டு, கோவில் முன்பாக அமைந்துள்ள தாமிரபரணி படித்துறை பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பாபநாசம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கொரோனா தொற்றை கண்டுக்காமல் பாபநாசம் ஆற்றுப்பகுதியில் புனித நீராடினார்கள். 

சொரிமுத்து அய்யனார் கோவில்

முன்னதாக அப்பகுதிக்கு வாகனங்களில் வந்தவர்களை  விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வாகனங்களில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணிந்துள்ளார்களா? என்று சோதனை செய்த பின்னரே பாபநாசம் கோவிலுக்குள் அனுமதித்தனர்.

இதேபோல் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் நேற்று திறக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் குளிக்க தடை, பொங்கலிட தடை உள்ளிட்ட சில காரணங்களால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்தனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தபிறகே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்