சூதாடிய 7 பேர் கைது
திருக்குறுங்குடி பகுதியில் சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வடுகச்சிமதில் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பாழடைந்த வீட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த வடுகச்சிமதில் வடக்குத்தெருவை சேர்ந்த சங்கரபாண்டி (வயது 54), தெற்குதெருவை சேர்ந்த சுந்தரபாண்டி (42), பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகதுரை (41), சிவன்பாண்டி (53), மற்றொரு சிவன் பாண்டி (48), பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்த மகாராஜன் (46), செட்டிமேட்டை சேர்ந்த முருகன் (54) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.