கோவிலில் நகை திருட்டு

ஏர்வாடி அருகே கோவிலில் நகை திருடியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2021-07-06 19:12 GMT
ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் மேலூரை சேர்ந்தவர் அப்பாத்துரை (வயது 57). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், ஊருக்கு மேல்புறமுள்ள தனது தோட்டத்தில் வன பேச்சியம்மன் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார். 

இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் கோவில் முன்புறமுள்ள இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் எடையுள்ள 6 தங்க தாலிகளை திருடிச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் தோட்டத்துக்கு சென்ற அப்பாத்துரை, கோவிலில் கதவு உடைக்கப்பட்டு, தாலிகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்