காரில் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-06 19:09 GMT
பேட்டை:

நெல்லை பேட்டை கருங்காடு சாலை பகுதியில் நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த காரை மடக்கிப்பிடித்து காரில் இருந்த 3 ஆயிரத்து 220 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக நாங்குநேரியை சேர்ந்த வானமாமலை (வயது 24), மதுரையை சேர்ந்த கார் டிரைவர் வினோத் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்