வேலூர்
வேலூர் காந்திரோடு ஜெயராம்செட்டி தெருவில் ஜெயின் சங்கம், மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை இணைந்து திருநங்கைகளுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட சமூகநல அலுவலர் முருகேஸ்வரி, ஜெயின் சங்க தலைவர் ருக்ஜிராஜேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 78 திருநங்கைளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.