திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆற்காடு
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பின்னத்தாங்கல், நல்லூர் ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட தார் சாலைகள் மற்றும் நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணிகளை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு வேலைகளை முறையாக ஒதுக்கிட அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அனைத்து ஊராட்சி திட்டப்பணிகள், குடியிருப்பு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை கூறினார்.
அப்போது உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாஜலம், ஜெயஸ்ரீ, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, உதவி பொறியாளர் சரவணன், பணி மேற்பார்வையாளர் விஜயராகவன் உள்பட பலர் உடனிருந்தனர்.