மணல் திருடிய 2 பேர் மீது வழக்கு

சாயல்குடி பகுதியில் மணல் திருடிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-07-06 18:19 GMT
சாயல்குடி,
சாயல்குடி பகுதியில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையிலான போலீசார் மூக்கையூர் ஆற்றுப்படுகையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வயல் வெளியில் மணலுடன் வந்த டிராக்டரை நிறுத்த முற்பட்டனர். போலீசாரை கண்டவுடன் டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் சாயல்குடி வி.வி.ஆர். நகரை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் பெருமாள் மகன் மாடசாமி மற்றும் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


மேலும் செய்திகள்